கரூரில், மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திராவிட கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு திராவிட கழகம் சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தமிழக அரசின் முடிவுகளில் மத்திய அரசு தான்தோன்றித்தனமாக தலையிடுவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர் திராவிடக் கழகத்தினர்