கரூரில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
கரூர் மாவட்ட கைத்தறி துறையும், கரூர் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவனமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இல் உள்ள சரத்துக்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கரூர் திண்ணப்பா கார்னர், மனோகரா கார்னர், ஜவகர் பஜார் வழியாக திருவள்ளுவர் மைதானத்தை சென்று அடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்