கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது வாரிசுகள் 18 குடும்பத்தினருக்கு தன்னுடைய 7. 5 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார். அதில் சரவணன் என்ற ஒரு குடும்பத்தினர் முழு நிலமும் தனக்கே சொந்தம் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் 17 குடும்பத்தை சேர்ந்த மற்ற பங்குதாரர்கள் மற்றும் அவரது வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சரவணன் அவரது வாரிசுகளின் தூண்டுதலின் பேரில், பங்கு பிரித்த 7. 5 ஏக்கர் நிலத்திற்கும் கம்பி வேலி போட்டு, 5 பொக்ளைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளார்.
ஆனால், சரவணன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசாங்க பணியில் இருப்பதால், வெங்கமேடு காவல் நிலையத்தில் வாரிசுதாரர்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட இடத்தின் வாரிசுதாரர்கள் இன்று அந்த இடத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கமேடு காவல் காவல்துறையினர், வழக்கு நிலுவையில் இருப்பதால், நிலத்திற்கு உள்ளே யாரும் பிரவேசிக்க கூடாது என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், பொக்லைன் இயந்திரங்களை வெளியேற்றினர்.