அரசு போக்குவரத்து கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர். கரூரில், மகாகவி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் தமிழரசி, நிர்வாக மேலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களை சந்தித்து மனு அளித்த பிறகு, சங்கத்தின் தலைவர் கந்தசாமி, செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததாக கூறினார். அதில் கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி மேலாண்மை குழுவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிட வலியுறுத்தியும், அரசு போக்குவரத்து கழகத்தில், அட்வைசர் கமிட்டி குழுவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்க வலியுறுத்தியும், அனைத்து தாலுகாவிலும் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததாக தெரிவித்தார்.