வாங்க பாளையத்தில் சட்டவிரோத புகையிலை விற்பனை. ஒருவர் கைது.
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத புகையிலை விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகனுக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அடிப்படையில் ஏப்ரல் 15ஆம் தேதி காலை 10 மணியளவில் வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அருகில் உள்ள வாங்க பாளையத்தில் டீக்கடை நடத்தி வரும், வெண்ணைமலை, சண்முகா நகரைச் சேர்ந்த பிரவீன் மணிமாறன் வயது 26 என்பவர் அவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கூல் லிப் புகையிலை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 353 கிராம் எடை கொண்ட ஹான்ஸ் & கூல் லிப் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பிரவீன் மணிமாறன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிறகு அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.