கரூரில் த. வெ. க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

71பார்த்தது
கரூரில் த. வெ. க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக கருதப்படும் ரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு நூற்று வருகிறார்கள்.

அதிகாலை முதல் மாலை வரை அன்ன, ஆகாரம், குடிநீர் ஏதுமின்றி அல்லாஹ்வை மனதில் கொண்டு நோன்பு நூற்கின்றனர்.

மாலையில் சிறப்பு தொழுகை நடத்திய பிறகு நோன்பை திறக்கிறார்கள்.

அண்மை காலமாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒரு சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்வேறு மதத்தினரும் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரியாணி, பேரிச்சம்பழம், ரோஸ் மில்க் பலகாரம் உள்ளிட்டவைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி