டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி கணவன் மனைவி படுகாயம்.

71பார்த்தது
நொய்யல் குறுக்கு சாலையில் டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேட்ட மங்கலம் அருகே உள்ள புங்கோடை குளத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் வயது 47. இவரது மனைவி கோமதி வயது 35.

இவர்கள் இருவரும் பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 7: 30 மணி அளவில் கரூர் - ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.


இவர்களது வாகனம் நொய்யல் குறுக்கு சாலை, அண்ணாநகர் பகுதியில் உள்ள மங்கள மஹால் அருகே சென்றபோது,


அதே சாலையில் பின்னால், ஈரோடு மாவட்டம், கொடுமுடி, ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த தனியார் பேருந்து, லோகநாதன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் கணவன் - மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.


இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக லோகநாதன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தனியார் பேருந்து ஓட்டுனர் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி