மருத்துவமனை தூய்மை பணியாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் கரூர் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட தலைவர் பழனியம்மாள் தலைமையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி, பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைத்தலைவர் அசோக்குமார், செயலாளர் சுப்பிரமணி, எல்பிஎப் மாவட்ட தலைவர் அண்ணாவேலு உள்பட கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். ईபிஎப் வழங்க வேண்டும். ஊழியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.