கரூரில் ஏவல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்திய கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில்
பதவி உயர்வு பெறுவதில் முரண்பாடுகளை களைய வேண்டி கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன், மாவட்ட அமைப்புச் செயலாளர் மனோகரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சண்முக வடிவு, முன்னாள் மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயராணி உள்ளிட்ட இருபால் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். அனைத்து வகையான நலத்திட்டங்களை EMIS பதிவு செய்வதற்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது போல பள்ளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.