இரவு கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் மக்கள் அவதி

1033பார்த்தது
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை, மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கரூர் மாநகர் பகுதி, வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோணி மலை, மண்மங்கலம், காந்திகிராமம், கிருஷ்ணராயபுரம், வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 6) கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது‌.

இந்த நிலையில் தொழில்பேட்டை செல்வ நகர், நரி கட்டியூர் பகுதியில் கனமழையின் காரணமாக சாலை, வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் இரவு நேரத்திலும் மழை பெய்தால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வரும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு எடுக்கும் படி அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்,

தொடர்புடைய செய்தி