தாந்தோணி கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி பகுதியில் செயல்படும் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட சமூக பொறுப்புரிமை நிதி யிலிருந்து ரூபாய்75 லட்சம் மதிப்பில் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பூமி பூஜையில் பங்கேற்று , கிளை நூலகத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் பணியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ , கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் , மாமன்ற உறுப்பினர்கள் ,
பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவையும் , அடிக்கல் நாட்டு விழாவையும் சிறப்பித்தனர்.