வீரபாண்டிய கட்டபொம்மன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிப்பு.

59பார்த்தது
வீரபாண்டிய கட்டபொம்மன் 266 வது பிறந்த நாள் விழா. அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


கரூரில் நேற்று மாமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி பகுதியில் உள்ள அவரது முழு திருவுருவ சிலைக்கு வாழவந்தியார் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


முன்னதாக வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் குழுவினரின் தேவராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இளைஞர்கள் பல்வேறு நடன அசைவுகளை அசைத்து பாடி பாடி மகிழ்ந்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி