மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கி பணியாளர் போட்டித்தேர்வுகளுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது தொடர்பான செய்தி குறிப்பு
கரூர், மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின்"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ்
போட்டித் தேர்வுகளாகிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), இரயில்வே
தேர்வு குழுமம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகளை
எழுதி வெற்றி பெற ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள www. naanmudhalvan. tn. gov. in என்ற இணையதளத்தில் 20. 05. 2023 க்குள் மாணவர்கள் தங்களின் விவரங்கள் முன்பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் மே மாதம் 25ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் கரூர் மாவட்ட
வேலை தேடும் இளைஞர்கள் மேற்குறித்த இணையதளத்தில் முன்பதிவு ஆட்சித்தலைவர்பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.