கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் டிசம்பர் 28ஆம் தேதி காலை 11:30 மணி அளவில், பசுபதிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகே உள்ள கொடியரசு கோவில் தெரு பகுதியில் பணம் வைத்து சூதாடுவது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம், மோகனூர், நவலடியான் கோவில் தெருவைச் சேர்ந்த காமராஜ், கரூர் வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த ஒச்சதேவன், பசுபதிபாளையம் குடியரசு கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ் மற்றும் செல்லதுரை ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட்டுக்குப் பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200 பறிமுதல் செய்தனர்.
பின்னர் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.