இந்திய நாட்டின் முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தியின் எண்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் கடைவீதி பகுதியில் மாவட்ட
காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
காங்கிரஸ் கட்சியின் கரூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு உள்ளிட்ட
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளதாக
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.