விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்து கூறி, அதற்கு உண்டான தீர்வை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் குறைகளைக் கேட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அந்த குறைகளை உடனடியாக தீர்வு காணுமாறு உத்தரவிட்டார்.