அணைப்பாளையம் அணையை தூர்வாரவேண்டும். விவசாயிகள் கோரிக்கை.
க. பரமத்தி அருகே தென்னிலை கார்வழி அணைப்பாளையம் அணை உள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் வெள்ள காலங்களில் வரும் மழைநீர் கீழ்பவானி ஆற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் , ஈரோடு மாவட்டம் சின்ன முத்தூர் நொய்யல் ஆறு தடுப்பனையிலிருந்து வரும் நீர் வாய்க்கால் மூலம் தேக்கப்பட்டுஅணைக்கு கொண்டுவரப்படுகிறது.
இதன் மூலம் துக்காட்சி , தென்னிலை கீழ் பாகம் , அத்திப்பாளையம் ,
குப்பம் , சத்திரம் , வாங்கல் குப்பிச்சிபாளையம் வரை 21, 000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த சூழலில் நொய்யல் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட சாயக்கழிவு நீரால் அணைப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.
2020 முதல் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பும் பட்சத்தில் அணைப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
எனவே அனைப்பாளையும் அணையில் தூர்வார வேண்டும் என நொய்யல் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.