சிபில் ஸ்கோர் ரத்து செய்ய காய்கறிகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்ட விவசாயிகள்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்னிலை ராசா தலைமையில் விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் விளைந்த தக்காளி, வெண்டை, கத்தரி காய்கறிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
மனு குறித்து சங்கத்தின் மாநில செயலாளர் தென்னிலை ராசா செய்தியாளர்களிடம் தெரிவித்த போது ,
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் பார்த்து மட்டுமே வழங்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளரின் சுற்றரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம்.
இந்த சுற்றரிக்கை ஏற்கனவே நலிந்து போய் உள்ள விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பது போல உள்ளது.
விவசாயத்தில் சரியான வருமானம் கிடைக்காதலால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிபில் ரிப்போர்ட் என்ற பிரச்சனையில் உள்ளோம்.
இனி கூட்டுறவு சங்கங்களில் பெறும் கடன்களும் சிபில் பதிவேற்றம் செய்தால், வங்கிகளில் பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மாநில பதிவாளரின் சுற்றரிக்கையை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதரத்தை காத்திட வேண்டும் என்று கொடுத்த மனுவை ஏற்று கொண்ட ஆட்சியர், முதல்வரிடம் பரிந்துரைப்பதாக கூறினார்.