வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை தொழிற்பயிற்சி சேர்க்கை- ஆட்சியர்

54பார்த்தது
வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை. ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு.


கரூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (https: //skilltraining. tn. gov. in/DET/) என்ற இணையதளம் மூலமாக இணைய வழியே சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07. 06. 24.
10. 05. 24 முதல் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 1. தையல் தொழிற்நுட்ப பயிற்சி- 8-ம் வகுப்பு &10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் -1 ஆண்டு (மகளிர் மட்டும்).

2. கணினி தொழிற்நுட்ப பயிற்சி -10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம்-1 ஆண்டு (மகளிர் மட்டும்).

3. Mechanic Auto Body Repair - 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம்-1ஆண்டு.
இருபாலரும்.

4. Operator Advanced Machine Tools -10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் -2 ஆண்டு. இருபாலரும்.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் அரசால் வழங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பாக, கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711) வாயிலாக & நேரில் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :