ஈசநத்தம்- பணம் வைத்து ரங்கர்கட்டை சூதாட்டம் நடத்தியவர் கைது.
By sampathkumar 74பார்த்ததுஈசநத்தம் அருகே பணம் வைத்து ரங்கர் கட்டை சூதாட்டம் நடத்தியவர் கைது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, பள்ளப்பட்டி, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம் வயது 68.
இவர் மார்ச் 20 ஆம் தேதி இரவு 10: 30 மணி அளவில் ஈசநத்தம் பகுதியில் உள்ள தனியார் சிக்கன் கடை அருகே ரங்கர் கட்டை என்ற சூதாட்டத்தை நடத்தி உள்ளார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் சூதாட்டம் நடத்திய அக்கீமை கைது செய்தார்.
மேலும் சூதாட்டம் நடத்த பயன்படுத்திய ரங்கர் கட்டை மற்றும் ரூபாய் 450-யும் பறிமுதல் செய்தார்.
பின்னர் அக்கிம்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.