கரூர்-கோவை சாலையில் ஆண்டாங்கோயில் மேல்பாகம் ஊராட்சி கோவிந்தம் பாளையத்தில் வசிப்பவர் அருள் (வயது 47). இவர் அதிமுகவில் நிர்வாகியாக உள்ளார்
இவர் வீட்டின் முன்புறம் உள்ள உள்ள பள்ளத்தில் 2 லோடு கிராவல் மண்ணை கொட்டி சமன் செய்து வீட்டிற்கு வழி ஏற்படுத்தினர்.
இதனை அறிந்த ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பழனிச்சாமி அளித்த புகாரில் அருளை விசாரணைக்காக காவல் நிலையம் வரும்படி தகவல் தெரிவித்ததையடுத்து விசாரணைக்காக வந்த அருளை போலீசார் சிறையில் அடைக்க
நேற்று இரவு ஏற்பாடு
செய்தனர்.
தகவலறிந்து காவல் நிலையத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வழக்கறிஞர்கள் மூலம் அருளை ஜாமீன் எடுப்பதற்கான பணியினை மேற்கொண்டார். தகவல் அறிந்த அதிமுகவினர் காவல் நிலையத்தில் ஒன்று கூடியதால் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில் கைது செய்த அருளை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி பிணையில் விடுவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் தெரிவித்த எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுகவினர் மீது தொடர் பொய் வழக்கு பதியப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதற்கெல்லாம் ஆண்டவன் நல்ல முடிவை சொல்வான், இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.