நிதிநிலை அறிக்கையை கண்டித்து கரூரில் திமுக ஆர்ப்பாட்டம்.

68பார்த்தது
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து கரூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.

அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்காக எந்த நிதியும் ஒதுக்கததை கண்டித்து பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை அறிவிக்கவும், ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்கி தராமலும், வஞ்சிக்கும் நோக்கோடு செயல்பட்டதால், இன்று தமிழக முழுவதும் திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.


இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மற்றும் கரூர் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை தராத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி