தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

76பார்த்தது
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.


தேமுதிக கட்சியின் நிறுவன தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், திரைப்பட முன்னணி நடிகராக இருந்தவருமான "கேப்டன்" என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

கடந்தாண்டு இதே நாளில் உடல் நலம் குன்றி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பாக செயல்படுத்த கட்சியின் தற்போதைய பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், விஜயகாந்த் தீவிர ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.


இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் அரவை முத்து தலைமையில் சென்னைக்கு செல்வதற்கு முன்பாக, கரூரில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி, அவரது திருவுருவப் படத்திற்கு கற்பூரம் காட்டி வணங்கி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது இதயத்தில் வாழும் தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்தினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி