வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து
தாந்தோன்றிமலை & வாங்கல் பகுதிகளில் செயல்பட உள்ள முதல்வர் மருந்தகம் விற்பணை நிலையம் தயார் ஆகி வருவதையும், பஞ்சமாதேவி பகுதியில் முதல்வர் மருந்தகத்திற்கான மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு செயல்படுத்தவுள்ள இடத்தினையும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா, குளித்தலை சார் ஆட்சியர் ஸ்வாதிஶ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் கந்தராஜா, வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன் மற்றும் தொடர்புடைய அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.