குரூப் 4 தேர்வு காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

60பார்த்தது
தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 99 மையங்களில் 26, 869 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை 8 மணிக்கு வந்த தேர்வர்கள் சுமார் 1 மணி நேரமாக பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். அதனை தொடர்ந்து 8. 45 மணியளவில் தேர்வு எழுதுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு அந்தந்த அறைகளுக்கு தேர்வர்களை அனுப்பி வைத்தனர்.

மின்னனு சாதனங்கள், செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அவை வைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்ட அறைகளில் வைத்து விட்டு தேர்வர்கள் தேர்வு எழுதச் சென்றனர். ஒன்பது மணிக்கு மேல் தேர்வு எழுத வந்தவர்களை அதிகாரிகள் காவல்துறையினர் அனுமதிக்காததால் திரும்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி