தாந்தோணி மலை- அங்காளம்மன் குரூப்ஸ் சார்பில் சமாராதனை விழா.

50பார்த்தது
தாந்தோணி மலையில் அங்காளம்மன் குரூப்ஸ் சார்பில் சமாராதனை விழா நடைபெற்றது.

"தென் திருப்பதி" என அழைக்கப்படும் கரூர் கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம்.

இதே போல கரூரில் ஆன்மீகப் பணியில் அர்ப்பணித்து தொடர்ந்து சேவைகளை ஆற்றி வரும் அங்காளம்மன் குரூப்ஸ் சார்பில் இன்று தாந்தோணி மலை வெங்கட்ராமன சாமி கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் 5-ம் ஆண்டு
சமாராதணை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தாந்தோணி அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு 11இலை போட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெருமாள் சுவாமியின் அடியார்களாக விளங்கும் தாதர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு இரண்டு இலை போட்டு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பெருமாள் சுவாமியை நிந்தித்து பூஜித்து வரும் தாதர்களுக்கு வழங்கும் சிறப்பு விருந்தில், தாதர்கள் வடிவில் பெருமாள் சுவாமி பங்கேற்பதாக ஒரு ஐதீகம் உள்ளது.

இதனால் தாதர்களுக்கு வழங்கும் உணவை யாசகமாக பெற்று, பிரசாதமாக உண்டால், வாழ்வில் ஏற்பட்ட அனைத்து துன்பங்களும் தீரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற தாதர்களுக்கான சிறப்பு விருந்தில், பொதுமக்கள் பங்கேற்று தாதர்களிடமிருந்து யாசகம் பெற்று, அதனை பிரசாதமாக உட்கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற 500க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி