சைக்கிள், டூவீலர்கள் அடுத்தடுத்து மோதியதில் ஐந்து பேர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
கரூர், தோரனக்கல்பட்டி அருகே பல்வார்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் உதயகுமார் வயது 19.
இவர் பிப்ரவரி 22ம் தேதி மாலை 6 மணி அளவில், கரூர் - மதுரை சாலையில் அமராவதி பாலம் அருகே சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது சைக்கிளுக்கு முன்னே, கரூர் வஞ்சிலியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நிஜந்தன் வயது 43, கரூர் வையாபுரி நகர், 1வது கிராஸ்-சை சேர்ந்த ரமேஷ் உடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இதே வேளையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்த மாயி வயது 26, அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ் என்பவரை பின்னால் அமரவைத்து டூவீலரில், வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு முன்னால் சைக்கிளில் சென்ற உதயகுமார் மீதும், அதற்கு முன்னால் நிஜந்தன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் உதயகுமார், நிஜந்தன், ரமேஷ், மோசஸ், மாகி ஆகிய 5- பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உதயகுமார் அளித்த புகாரில், காவல்துறையினர் டூவீலரை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாயி மீது கரூர் மாநகர காவல் துறையினர்.
வழக்கு பதிவு செய்தனர்