கரூர்-தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஊழல். சமூக ஆர்வலர் பேட்டி.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வேலகாரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தானந்தம்.இவர் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்.கிருஷ்ணராயபுரம் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் செந்தில் என்பவர் உரத்தை இவருக்கு தெரியாமல் திருடி விற்று விட்டதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதுகுறித்து நேரில் கேட்டால் நீங்கள் எங்கு சென்று வேண்டுமென்றாலும் புகார் கொடுங்கள் எங்களுக்கு கவலை இல்லை என செந்தில் மற்றும் சிவராஜ் கூறுவதாக தெரிவித்தார்.
கிருஷ்ணராயபுரம் கூட்டுறவு சங்கத்தில் 35 ஆண்டுகளாக ஒரே இடத்தில் செந்தில் என்பவர் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். தனது மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாக கூறினார்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்று கூறினார்.