மாநாட்டின் அறைகூவல் தீர்மானங்களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மையத்தின் சார்பில், தமிழக முதலமைச்சரின் மௌனம் கலைக்கும், மாநில மாநாட்டின் போராட்ட அறைகூவல் தீர்மானங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கரூர் வட்ட செயலாளர் ஜமுனாராணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் அழகிரிசாமி உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தும் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த வேண்டும்.
அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
நிறுத்தப்பட்டுள்ள வருவாய் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்தி, சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களைக் கொண்டே அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.