வேலை வாங்கி தருவதாக மோசடி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

339பார்த்தது
ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் அடுத்த சோளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா இவர் பி. ஏ. , பி. எட். , முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் உடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மூலமாக புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் ஸ்டோர் இன்சார்ஜ் ஆக பணிபுரிந்து வரும் மீனாட்சி என்பவர் அறிமுகம் கிடைத்துள்ளது. மீனாட்சி தனக்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை நன்கு தெரியும் என்றும், சக்திவேல் மனைவி தீபாவிற்கு டிஎன்பிஎல் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு தவணை முறையில் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். மேலும், மீனாட்சி என்பவருக்கு உடந்தையாக கடலூர் மாவட்டம், அதிமுகவை சேர்ந்தவர் ஆதரவாக பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகிள்ளது. இந்த நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடியில் ஈடுபட்ட மீனாட்சி மீது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபா தனது கணவர் சக்திவேலுடன் வந்து புகார் மனு அளித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி