வடமாநில பெண்களிடம் தமிழ் கற்றுக் கொள்ள ஆட்சியர் தெரிவித்தார்

67பார்த்தது
கரூரில் மகளிர் விடுதியில் தங்கும் வடமாநில பெண்களிடம் தமிழ் கற்றுக் கொள்ள ஆட்சியர் தெரிவித்தார்.


உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட மணல் மேடு கிராமத்தில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 1000 பெண்கள் தங்கும் விடுதி கட்டுமானப்பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் ஒரு பகுதியாக தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்காக கட்டப்படும் பணிகளை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு 1000 பேர் பெண்கள் தங்கும் அறை, உணவுக் கூடம், சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக ஆய்விற்கு வந்த மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு அந்நிறுவனத்தின் உரிமையாளர் நாச்சிமுத்து சால்வை, மாலை அணிவித்து வரவேற்றார்.

அப்போது, அங்கு பணி புரியும் வடமாநில பெண்கள் வரிசையில் நின்று வரவேற்றனர்


அப்போது, அப்பெண்கள் வணக்கம் தெரிவித்த ஆட்சியரை வரவேற்றனர்.

அவர்களிடம் தமிழ் தெரியுமா என ஆட்சியர் கேட்டதற்கு கொஞ்சம், கொஞ்சம் தெரியும் என தெரிவித்தனர்.

அதற்கு ஆட்சியர் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றார். அதனை அப்பெண்கள் ஆர்வமுடன் ஏற்றுக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி