ஆட்சிமொழி சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் துவக்கம்

85பார்த்தது
கரூர் தாந்தோன்றி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கரூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவை சிறப்பாக கொண்டாடடும் வகையில் கடந்த 18. 12. 24 அன்று முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழி செயலாக்கம் & அரசாணைகள், கணினி பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும் அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கமும்,
தமிழ்மொழியில் கோப்புகளை பராமரித்தல், அலுவலக நடைமுறைகளில் தமிழை முழுமையாகச் செயற்படுத்துவது உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இன்று சுமார் 200 மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி தாந்தோன்றி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக சென்று அரசு கலைக் கல்லூரியை வந்தடைந்தது.


இந்நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஜோதி, கல்லூரி முதல்வர் முனைவர். சுதா, தமிழ் அறிஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொது மக்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி