கரூர்: சிஐடியு 10வது மாவட்ட மாநாடு

66பார்த்தது
க. பரமத்தி சிஐடியு 10வது மாவட்ட மாநாடு - வரவேற்பு குழு கூட்டம் நடைபெற்றது. 

கரூர் மாவட்ட சிஐடியு சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் க. பரமத்தியில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட மாநாடு வரவேற்பு குழு கூட்டம் இன்று (ஜூன் 11) க. பரமத்தியில் தனியார் திருமண மண்டபத்தில் சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி வரவேற்பு குழு தலைவர் ஆகவும், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜா முகமது வரவேற்பு குழு செயலாளராகவும், சிஐடியு மாவட்ட துணை தலைவர் குப்பம் கந்தசாமி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 51 பேர் கொண்ட வரவேற்பு குழுவும் தேர்வு செய்யப்பட்டது. 

மாவட்ட மாநாட்டின் முதல் நாள் ஜூலை 27ஆம் தேதி மாலை நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் சுமார் 2000 தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் எனவும், 28ஆம் தேதி 2 நாள் பொது மாநாடு நடைபெற உள்ளது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் மாவட்ட துணை தலைவர்கள் தண்டபாணி, ஹோச்சுமின், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன், ராஜேந்திரன், ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி