சர்ச்கார்னர் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். ஒருவர் உயிரிழப்பு.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதுதெரு அருகே உள்ள மொய்தீன் தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் வயது 52.
இவர் பிப்ரவரி 4ஆம் தேதி காலை 10: 15 மணி அளவில் கரூர் சர்ச் கார்னர் அருகே டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர் திசையில் வாங்கல், குப்பிச்சிபாளையம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அழகர் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிராக்டர், அலாவுதீன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த அலாவுதீனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் அறிந்த அலாவுதீன் மனைவி யாசுதின் வயது 38 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த அலாவுதீன் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக டிராக்டரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அழகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.