சர்ச் கார்னர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் வயது 66.
இவர் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5: 15- மணி அளவில்,
கரூர் சர்ச் கார்னரில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, சர்ச் கார்னர் பகுதியை கடக்கும் போது,
அதே சாலையில் பின்னால் , கரூர் பசுபதிபாளையம், வடக்கு தெரு, ஆண்டாள் நகரை சேர்ந்த மதன் வயது 42 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், கணேசன் ஓட்டிச் சென்று டூ வீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கணேசனுக்கு இடதுபுற இடுப்பு, வலது கை விரல்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால்,
உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கணேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, மதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.