மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஆட்சியர் ஆய்வு

82பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள "மக்களுடன் முதல்வர்" என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் 11. 07. 2024 முதல் 08. 08. 2024 வரை 46 இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டார ஊரகப்பகுதிகளில் 9 நாட்களில் மொத்தம் 46 இடங்களில், 32 இடங்களில் மக்களுடன் முகாம் திட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மீதமுள்ள 14 இடங்களில் "மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன. மேற்படி முகாம்களில் 15 துறைகள் சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்படவுள்ளன.

அதன்படி இன்று தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட மேலப்பாளையம், கோயம்பள்ளி, ஏழூர் ஆகிய ஊராட்சிகளுக்கு மேலப்பாளையம் SRM மஹாலிலும், தோகைமலை வட்டாரத்திற்குட்பட்ட புளுதேரி, இராசாண்டார் திருமலை, வடசேரி ஆகிய ஊராட்சிகளுக்கு காவல்காரன்பட்டி சமுதாய கூடத்திலும், மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

போது வட்டாட்சியர்கள் குமரேசன்(கரூர்). குணசேகரன்(மண்மங்கலம்) உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி