தமிழக அரசு ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் தரமான மருந்துகளை பெறுவதற்காக தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்களை செயல்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் கரூரில் முதல் கட்டமாக தாந்தோன்றிமலை மற்றும் வாங்கல் பகுதியில் முதல்வர் மருந்தகங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் மருந்தகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் செயல்படுத்தவும் திட்டமிட்ட நிலையில், இன்று தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட முதல்வர் மருந்தகங்கள் தொடர்பான வீடியோவை கரூர் மாவட்ட நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ளது. அதில் சந்தை விலையை விட 75 சதவீதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.