முதலமைச்சர் 72வது பிறந்தநாள் இலவச மருத்துவ முகாம்

67பார்த்தது
தமிழக முதல்வரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நேற்று மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

இந்த மருத்துவ முகாமில் இருதயம், நரம்பியல், பொது மருத்துவம் உள்ளிட்ட 12 துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் நேற்று காலை முதல் மாலை வரை 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு செய்து மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றனர். கண் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினர். 

இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வருடம் தோறும் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என்றும், மேல் சிகிச்சைக்குத் தேவைப்படக்கூடிய செலவுத் தொகையையும் திமுக சார்பில் வழங்கப்படும் என்றார். கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் தங்குவதற்காக தோழி மகளிர் விடுதி, புதிய சிட்கோ அமைப்பதற்கான அறிவிப்பை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி