சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தியவர் மீது வழக்கு பதிவு

76பார்த்தது
கோரகுத்தி அருகே சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தியவர் மீது வழக்கு பதிவு. நான்கு சேவல்கள் 12 கத்திகள் பறிமுதல்.

கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோரக்குத்தி பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 16ஆம் தேதி மதியம் 3: 30மணி அளவில், அருகிலுள்ள கோரக்குத்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அருகில் உள்ள விஷ்வா என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோப்பு அருகே உள்ள முள் தோட்டத்தில் சேவல் சண்டை நடப்பது கண்டறியப்பட்டது.

சேவல் சண்டைக்கு பயன்படுத்திய நான்கு சேவல்களும், அதன் கால்களில் கட்டப்படுவதற்காக பயன்படுத்தும் 12 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கரூர் மாவட்டம் , மண் மங்கலம் தாலுக்கா, பசுபதிபாளையம், வடக்கு தெருவை சேர்ந்த விஸ்வா வயது 33 என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர் மாயனூர் காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி