நங்கவரம் பகுதியில் வீட்டை சேதப்படுத்திய 2 பேர் மீது வழக்கு

81பார்த்தது
நங்கவரம் பகுதியில் வீட்டை சேதப்படுத்திய 2 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது 55. இவர் திருச்சி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த பனையடியான் (50) மற்றும் மணிகண்டன் (30) ஆகிய இரண்டு பேரும் வீட்டின் முன்பு தகாத வார்த்தைகளைத் திட்டி சாகுல் ஹமீதின் மகனைக் கொலை மிரட்டல் விடுத்தும் வீட்டின் ஓடுகளை கையில் வைத்திருந்த கட்டையால் உடைத்தும் பைக்கில் இருந்த இண்டிகேட்டர் லைட்டைச் சேதப்படுத்தியும் சென்றுள்ளனர். இதுகுறித்து சாகுல் ஹமீது அளித்த புகாரின் பேரில் நங்கவரம் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி