தடா கோவில் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல். பெண் உள்பட 3 பேர் படுகாயம்.
திருப்பூர் மாவட்டம் , தாராபுரம், இடைக்கால்பாடி , தெற்கு தெருவை சேர்ந்தவர் தண்டபாணி வயது 57.
இவரது மனைவி வனிதா வயது 45. மகன் ராகேஷ் வயது 17.
இவர்கள் மூவரும் அவர்களுக்கு சொந்தமான காரில் ஜூன் 9-ம் தேதி மாலை 6: 30- மணி அளவில் , திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்றனர்.
இவர்களது கார் தடா கோவில் பகுதியில் உள்ள அரவக்குறிச்சி பிரிவு அருகே சென்ற போது ,
எதிர் திசையில் ஈரோடு மாவட்டம் , பவானி , மொன்னாச்சி காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராகுல் குமார் வயது 33 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் ,
தண்டபாணி ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தண்டபாணி , அவரது மனைவி வனிதா, மகன் ராகேஷ் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக மூவரையும் மீட்டு சின்ன தாராபுரம் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக தண்டபாணி அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , இது தொடர்பாக காரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராகுல் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.