மதுரை-சேலம் சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.

50பார்த்தது
மதுரை-சேலம் சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.


கரூர் மாவட்டம், மண்மங்கலம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி வயது 47.


இவர் டிசம்பர் 23ஆம் தேதி மதியம் 2: 45- மணி அளவில், மதுரை-சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.


இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள அம்மன் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தபோது,


இவருக்கு பின்னால் கர்நாடக மாநிலம், பெங்களூர், அரசினாக்கொண்டே, பரிமளம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், ரெங்கசாமி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் பின்னந்தலையில் படுகாயம் அடைந்த ரங்கசாமியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ரங்கசாமியின் மனைவி நித்தியா வயது 39 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தீபக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி