நடந்துசென்ற மூதாட்டிமீது கார்மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்

53பார்த்தது
அம்மாபட்டி பிரிவு சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.


கரூர் மாவட்டம், வெள்ளியணை, வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி ஜானகி வயது 60.


பிப்ரவரி 2ஆம் தேதி காலை 10 மணி அளவில், வெள்ளியணை- ஜல்லிபட்டி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது அம்மாபட்டி பிரிவு அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், புலியூர் அருகே
பி. வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்தி வயது 27 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், நடந்து சென்ற ஜானகி மீது மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக ஜானகியை மீட்டு கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இது தொடர்பாக ஜானகி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி