விதி மீறி செயல்படும் கல்குவாரி. குமுறும் கிராம மக்கள். குவாரியை இழுத்து மூட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.
கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா பௌத்திரம் கிராமத்தில் பாலா ப்ளூ மெட்டல் குவாரி செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே மீண்டும் மற்றொரு குவாரி அனுமதி பெற்று செயல்படுகிறது.
அனுமதி பெறும்போது, ஒப்புக்கொண்ட விதிகளை மீறி கல்குவாரி செயல்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த, கருப்பண்ணன், பழனியப்பன், சுப்பிரமணி மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சிய்ரை சந்தித்து விதி மீறல்களுடன் செயல்படும் பாலா ப்ளூ மெட்டல் குவாரியை மூடக்கோரி மனு அளித்தனர். மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, தற்போது அமைக்கப்பட்ட கல்குவாரியால் ஆடு, மாடுகளை பராமரிக்க இயலவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை, வீட்டிற்குள் அமர்ந்து உணவு அருந்த முடியவில்லை. அந்த அளவுக்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது எனவும், 200 அடி உயரத்திற்கு மண் குவியலை அமைத்துள்ளதால் காற்று அடிக்கும் போது அதில் உள்ள மாசு வீட்டிற்குள் வந்து விடுவதால் வீட்டில் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியவில்லை என தெரிவித்தனர்.
எனவே விதி மீறி செயல்படும் கல்குவாரியை மூட வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.