மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை பெற ஆட்சியர் அழைப்பு.

68பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகை பெறாதவர்கள்
பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதம் தோறும் ரூபாய் 2000 பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40% மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட அறிவு சார் குறைபாடுடையோர், 75% க்கு மேல் கைகால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு பார்கின்சன் நோய், தண்டுபட மரபு நோய் ஆகிய நாள்பட்ட நரம்பியல் குறைபாடு உடையவர்களுக்கு பராமரிப்பு உதவி தொகை மாதம் ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து வாழ்நாள் சான்று பெற்று அளிக்க வேண்டும்.

அவ்வாறு வாழ்நாள் சான்று அளிக்காத மாற்றுத்திறனாளிகள் ஜூன் 28ஆம் தேதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து 2024 -25 ஆம் ஆண்டிற்கான பராமரிப்பு தொகையை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி