காலை உணவு திட்டம் 3-ம் கட்டம் விரிவாக்கம். ஆட்சியர் ஆலோசனை.

72பார்த்தது
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 3-ம் கட்டம் விரிவாக்கம். ஆட்சியர் ஆலோசனை.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக, கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீ லேகா தமிழ்ச்செல்வன் மற்றும் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி