கரூர் கடை வீதியில் நூல் அறிமுக விழா

57பார்த்தது
கரூர் கடைவீதியில் அமைந்துள்ள ரவிஸ் மினி மஹாலில் டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில், கோவக்குளம் மலைக்கொழுந்தன் எழுதிய, இந்து சமய அறநிலை துறையும், திராவிட இயக்கமும் நூல் அறிமுக விழா தந்தை பெரியார் திராவிட கழக கரூர் மாவட்ட தலைவர் கு. கி. தனபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிட கழக பிரச்சார செயலாளர் சீனி. விடுதலையரசு கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்து, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திராவிட கழக மாவட்ட தலைவர் குமாரசாமி, சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், விடுதலை நாளிதழ் கரூர் மாவட்ட வாசகர் வட்ட தலைவர் வழக்கறிஞர் குடியரசு, தமிழ் ஆர்வலர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், தமிழ்நாடு தோழர் கழகம் அமைப்பின் தலைவர் சண்முகம், தமிழர் பண்பாட்டு பேரவை ஆசிரியர் காமராசு சமூக கல்வி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக, இந்து சமய அறநிலைத்துறையும் திராவிடர் இயக்கமும் எனும் நூலை எழுதிய, கோவை குளம் மலைக்கொழுந்தன் நூலினை, வெளியிட்டு ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு முற்போக்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி