கரூரில் மனித உரிமை கழகத்தின் நிறுவன தலைவர் பிறந்தநாள் விழா

62பார்த்தது
மனித உரிமை கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழா மாநில அமைப்பு செயலாளர் ஐயப்ப துரை தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் கரூர் கடைவீதி முன்புள்ள காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் ரவிக்குமார், துணைத் தலைவர் காட்டு ராஜா, செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து கரூர் ஆசாத் சாலையில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி