கரூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனத் தலைவர் 91 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
தலித் மக்களின் மேம்பாட்டுக்காக அரசியல் ரீதியாக தலித்துகளை ஒன்று திரட்டி பாடுபட்டவர் கன்சிராம் அவர்கள்.
இவர் 1934 மார்ச் 15ஆம் தேதி பிறந்தார்.
பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் அறிவியல் உதவியாளராக பணிபுரிந்தார்.
1984 இல் அம்பேத்கர் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சியை துவக்கினார்.
இவர் வழியில் வந்த மாயாவதி உத்திரபிரதேச மாநில முதல்வராக நான்கு முறை பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்.
தலித் மக்களின் வாழ்க்கைக்காக போராடிய கன்சிராம் தனது 72 வது வயதில், 2006-ல்
அக்டோபர் 9ஆம் தேதி காலமானார்.
இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கரூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் கன்சிராம் அவர்களின் 91 வது பிறந்த நாளை பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் கொண்டாடினர்.
அப்போது கன்சிராம் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.
மேலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.