மகளிர் உரிமைத் தொகையில் கை வைக்க வங்கி அதிகாரிக்கு உரிமை இல்லை- ஆட்சியர் தங்கவேல்.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில், கரூர் மாவட்டம், தோகைமலை, சின்ன ரெட்டிபட்டி அருகே உள்ள பொருந்தலூர் பகுதியை சேர்ந்த குமாரி என்பவர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் குமாரி முறையிட்டபோது தனக்கு தோகைமலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிலையில் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது.
எனது பேரன் வாங்கிய கல்வி கடனை முறையாக திருப்பி செலுத்தி வருகிறார். அதில் ஒரு சில தவணை தவறி உள்ளது. இருந்த போதும் தொடர்ந்து கடனுக்கு உண்டான தொகையை செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தோகைமலை ஐஓபி வங்கி மேலாளர் தனக்கு வரும் மகளிர் உரிமை தொகையை கடனுக்கு கழித்துக் கொள்வதாக கூறுகிறார்.
எனவே வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அந்த வங்கியின் அதிகாரியை அழைத்து, மகளிர் உரிமை தொகையை கை வைக்க வங்கி அதிகாரிக்கு உரிமை இல்லை எனவும், இனிமேல் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தி, மகளிர் உரிமை தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு, புகார் கூறிய குமாரி நன்றி தெரிவித்தார்.